என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பர்வேஸ் முஷாரப்"
- முஷரப் நீண்ட காலமாகவே 'அமிலாய்டோசிஸ்' என்கிற அபூர்வ நோயால் அவதிப்பட்டு வந்தார்.
- 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற முஷரப் அதன் பிறகு பாகிஸ்தான் திரும்பவே இல்லை.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் கடந்த 1999-2008 வரை அதிபராக பதவி வகித்தவர் பர்வேஸ் முஷரப். முன்னாள் ராணுவ மந்திரியான இவர் கடந்த 2007-ம் ஆண்டு நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், மக்களின் போராட்டம் காரணமாக 2008-ம் ஆண்டு முஷரப் அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார்.
பின்னர் 2013-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார். அப்போது பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப்பை கைது செய்ய அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலில் போட்டியிடவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் உடல்நிலையை காரணம் காட்டி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு கோர்ட்டில் அனுமதி கோரினார். கோர்ட்டு அனுமதி வழங்கியதால் 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். ஆனால் அதற்கு பிறகு அவர் பாகிஸ்தான் திரும்பவே இல்லை.
இதற்கிடையில் பாகிஸ்தானில் அவசர நிலையை அமல் செய்த விவகாரத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் 2019-ம் ஆண்டில் பாகிஸ்தான் சிறப்பு கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இருப்பினும் அந்த தீர்ப்பை எதிர்த்து முஷரப் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லாகூர் கோர்ட்டு அவரின் மரண தண்டனையை ரத்து செய்தது. இதனிடையே துபாயில் வசித்து வரும் முஷரப் நீண்ட காலமாகவே 'அமிலாய்டோசிஸ்' என்கிற அபூர்வ நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சூழலில் முஷரப்பின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "முஷரப் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டன. அவர் குணம் அடைவது சாத்தியம் இல்லை. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என கூறியிருந்தனர். இந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் அதிபர் முஷரப்பை 'ஏர் ஆம்புலன்சு' (விமான ஆம்புலன்சு) மூலம் பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து, உயர் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "முஷரப்பை மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் குடும்பத்தினரின் சம்மதம் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு செய்யப்பட்டு வருகின்றன. இதில் 'ஏர் ஆம்புலன்சு'ம் அடங்கும். ராணுவம், அதன் முன்னாள் தலைவருக்கு ஆதரவாக நிற்கிறது" என கூறப்பட்டுள்ளது.
- இறுதிச்சடங்கில் அதிபர் ஆரிப் ஆல்வியோ, பிரதமர் ஷெபாஸ் ஷெரீபோ கலந்துகொள்ளவில்லை.
- ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்
கராச்சி:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ம் தேதி அவரது உயிர் பிரிந்தது.
இதையடுத்து அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் துபாயில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு கொண்டு வரப்பட்டது. இன்று கராச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள குல்மகர் போலோ மைதானத்தில் இறுதிச்சடங்குகள் மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பின்னர் அங்குள்ள ராணுவ கல்லறை தோட்டத்திற்கு முஷாரப் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில் தற்போதைய அதிபர் ஆரிப் ஆல்வியோ, பிரதமர் ஷெபாஸ் ஷெரீபோ கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், கூட்டுப் படைகளின் தலைவர் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, முன்னாள் ராணுவத் தளபதிகள் கமர் ஜாவேத் பஜ்வா, அஷ்பக் பர்வேஸ் கயானி மற்றும் அஸ்லம் பெக் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ஷுஜா பாஷா, ஜாகீருல் இஸ்லாம் மற்றும் ஓய்வு பெற்ற பல்வேறு ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முத்தாகிதா குவாமி இயக்கத்தின் (பாகிஸ்தான்) தலைவர்கள் காலித் மக்பூல் சித்திக், டாக்டர் ஃபரூக் சத்தார், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் அமீர் முகம், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவரும், சிந்து மாகாண முன்னாள் ஆளுநருமான இம்ரான் இஸ்மாயில், மத்திய தகவல் துறை முன்னாள் அமைச்சர் ஜாவேத் ஜப்பார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
சிந்து மாகாணத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அல்லது ஜமாத்-இ-இஸ்லாமியின் முக்கிய தலைவர்கள் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை.
- ராணுவ ஆட்சியை பிரகடன் செய்த முஷாரப், பாகிஸ்தான் பாராளுமன்றதை கலைத்து அரசியல் சட்டத்தையும் முடக்கினார்.
- காஷ்மீர் பிரச்சனைக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 79. நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். தேச பிரிவினையின் போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது. 1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார். நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து 1999-ல் அதிகாரத்தை கைப்பற்றினார் .
ராணுவ ஆட்சியை பிரகடன் செய்த முஷாரப், பாகிஸ்தான் பாராளுமன்றதை கலைத்து அரசியல் சட்டத்தையும் முடக்கினார்.
2001-ல் பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற முஷாரப், காஷ்மீர் பிரச்சனைக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்.
- இவர் 1999-ல் பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பதவிக்கு வந்தார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். இவர் 1999-ல் பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பதவிக்கு வந்தார்.
78 வயதாகும் முஷாரப் உடல் நிலையை காரணம் துபாய்க்கு சென்று அங்கேயே வாழ்ந்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னாள் அதிபர் முஷாரப் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள் இதனை மறுத்துள்ளன.
இந்நிலையில், துபாயில் உள்ள அவரது வீட்டில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அந்நாட்டு முன்னாள் தகவல் தொடர்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தற்போது துபாயில் உள்ளார்.
இந்த நிலையில், அவர் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏ.பி.எம்.எல்.) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்த தகவலை வெளியிட்ட அந்தக் கட்சியின் புதிய தலைவர் முகமது அம்ஜத். அரசியலில் இருந்து வாழ்நாள் முழுவதும் தடை செய்து பெஷாவர் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அடுத்து முஷரப் பதவி விலகி உள்ளதாக கூறி இருந்தார். இதையடுத்து முஷரப் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டாரோ என்று யூகங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளிக்கிற வகையில் முஷரப், வீடியோவில் செய்தி விடுத்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட திட்டமிட்டேன். ஆனால் பாகிஸ்தானுக்கு திரும்பி வந்தால் கைது செய்யமாட்டோம், வாழ்நாள் தகுதிநீக்க உத்தரவை விலக்கிக்கொள்வோம், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து (முஷரப்) பெயர் நீக்கப்படும் என்பதுபோன்ற வாக்குறுதிகளை விரும்பினேன்.
கவாஜா ஆசிப்பின் வாழ்நாள் தகுதி நீக்க உத்தரவு ரத்தாகிறபோது, எனக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் ரத்து செய்யக்கூடாது? நவாஸ் ஷெரீப் நாட்டை விட்டு செல்லலாம், திரும்ப வரலாம் என்று இருக்கிறபோது எனக்கு அந்த உரிமை கிடையாதா?
நான் விரும்பிய வாக்குறுதிகள் அளிக்கப்படவில்லை. எனது கட்சிக்காக நான் எதுவும் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். எனவே கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்து விட்டு நாட்டுக்கு திரும்புவதில்லை என்று முடிவு எடுத்தேன்.
சட்டப்பிரச்சினைகளால்தான் இந்த முடிவை எடுத்தேன். நான் தொடங்கிய கட்சியை ஆதரிப்பேன். எதிர்கால நடவடிக்கை குறித்து பின்னர் நிலைமையைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு முழுக்கு போடவில்லை என்பதை சூசகமாக உணர்த்தி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்